தொடர்புடைய செய்திகள்
- இன்ஸ்டாக்ராமை ஹேக் செய்த சென்னை இளைஞர் – சன்மானம் வழங்கிய இன்ஸ்டாக்ராம்
- ரயிலில் அடிபட்டு சிதைந்து போன வாலிபர்.. சென்னை அருகே நடந்த கொடூரம்
- கந்துவட்டி ரவுசு: மூட்டையில் பொட்டலமாக்கி வீசப்பட்ட பெண்!
- போலீஸுக்கு சவால் விட்டு பாட்டு: கைதான கானா சேட்டு
- விக்ரம், அமலாபால் ரசிகர்களுக்கு கிடைக்காத அதிகாலை தரிசனம்!
"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - முதலமைச்சர்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.இதில் சபைகூடும் நாட்களில் நாள்தோறும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளிடையே விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாடி என்ற பாடலை சுட்டிக்காட்டி பேசினார்.
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள், அதிகரித்து வருவதையும், அதுசம்பந்தமாக வெள்யாகிம் சிசிவிடி காட்சிகளை பார்க்கும் பெண்கள் அச்சப்படுவதாகவும் சபையில் தெரிவித்த காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமராமி. செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோடிக்கை வைத்தார்.
இதற்குப் பதில் அளித்த முதலமைச்சர் கூறியதாவது : குற்றசம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்கவும், செயின் பறிப்பு, கொலை, கொள்ளை குற்றங்களை தடுக்கவும் சென்னை முழுவது சுமார் 2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு அதனை காவலர்கள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்ந்து கண்காணிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று 58 ஆண்டுகளுக்கு முன்னரே எம்.ஜி.ஆர் பட பாடல் வரிகளிலேயே உலகிற்கு உணர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
