ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 18 ஜூலை 2019 (08:53 IST)

விக்ரம், அமலாபால் ரசிகர்களுக்கு கிடைக்காத அதிகாலை தரிசனம்!

விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' மற்றும் அமலாபால் நடித்த 'ஆடை' ஆகிய இரண்டு திரைப்படங்கள் நாளை வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களுக்கும் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு இருந்ததால் இந்த படங்களின் ஓப்பனிங் வசூல் திருப்திகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு படங்களுக்கும் நாளை அதிகாலை காட்சி இல்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
கடந்த சில ஆண்டுகளாகவே முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அதிகாலை 5 மணி காட்சிகள் திரையிடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதே போல் 'கடாரம் கொண்டான்', 'ஆடை' படங்களுக்கும் அதிகாலை காட்சிகள் திரையிடப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் இருந்து வெளிவந்துள்ள தகவலின்படி இந்த இரண்டு படங்களுக்கும் அதிகாலை காட்சிகள் இல்லை என்று தெரிய வந்துள்ளது
 
சென்னையில்  'கடாரம் கொண்டான்', 'ஆடை' ஆகிய இரு படங்களின் முதல் காட்சி காலை 9 மணிக்குதான் தொடங்குகிறது என்பதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் அலுவலகம் செல்பவர்களுக்கும் அதிகாலை காட்சி வசதியாக இருந்ததாகவும் அந்த காட்சி இல்லாததால் இன்று இந்த படங்களை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.