1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. These districts have heavy rain tonight! - Update by Weatherman!

இன்னைக்கு நைட்டு இந்த மாவட்டங்களுக்கு செம மழை இருக்கு! - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

Rain

இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

 

 

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாகவே பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மழை பொழிவு அதிகரித்துள்ளது. நேற்று இரவு முதலாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் இன்று மதுரை, திண்டுக்கல், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் டெல்டா பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ப்ரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

 

சென்னை மாலை முதலே வானம் மேகமூட்டமாக இருந்து வந்த நிலையில் தற்போது காற்று வீசத் தொடங்கியுள்ளதால் இன்று இரவு சென்னையிலும் நல்ல மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

அடுத்த கட்டுரையில்
வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைது!