ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 ஜூலை 2024 (14:39 IST)

இன்று மாலை முதல் 5 மாவட்டங்களில் காத்திருக்கு கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

Rain

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தலைநகரான சென்னையில் மாலை, இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை முதல் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K