தமிழ்நாட்டில் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் 17 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில், தற்போது காற்றின் திசைமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகனமழை வரை பெய்யத் தொடங்கியுள்ளது. இன்று நீலகிரியில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 17 மாவட்டங்களில் இன்று இரவுக்குள் ஆங்காங்கே மழை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், தேனி, தென்காசி விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும், காரைக்கால், புதுச்சேரியின் சில பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K