1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. There are three problems in RK Nagar said Vishal

ஆர்.கே.நகரின் மூன்று பிரச்சனைகளை தீர்ப்பேன். விஷால்

vishal
ஆர்.கே.நகரில் பல வருடங்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் மூன்று பிரச்சனைகளை தீர்க்கவே இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்

1. இந்த தொகுதியில் மழை நீர் தேங்கும் பிரச்சினை அதிகம் உள்ளது. வெள்ளம் வரும் நேரத்தில் இந்த தொகுதி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்யும் நேரம் இது

2. இந்த தொகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதையும் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். நல்ல சாலை வசதி செய்து தர வேண்டும் என்பதே எனது எண்ணம்

3. விளையாட்டுத்துறையிலும் இதுவரை வெளியில் வராத திறமைகள் இந்த தொகுதி இளைஞர்களிடம் உள்ளன, எனவே விழித்தெழுந்து அந்த மக்களுக்காக ஏதாவது செய்ய இதுவே நேரம்.

இந்த தொகுதியில் போட்டியிடுவதால் எனக்கு அரசியல் லாபம் எதுவும் இல்லை. நான் ஒரு சாமானிய மனிதனாக மக்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை உணர்கிறேன், உறுதி செய்யவும் கடமைப்பட்டுள்ளேன்''

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஆர்.கே.நகரில் அமீர் போட்டியா? சீமான் விளக்கம்