1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Suseenran support to Vishal political enttry

விஷாலுக்கு ஓட்டு போடுங்க: சுசீந்திரன் ஆதரவு

suseendran
நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட போவதாகவும், நாளை வேட்புமனு தாக்கல் செய்ய போவதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில் விஷாலின் இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வந்து கொண்டே உள்ளது.

விஷாலுக்கு இயக்குனர் அமீர் மற்றும் சேரன் உள்பட ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பெரும்பாலான திரையுலகினர் அவருடைய அரசியல் முயற்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன், 'விஷால் உண்மையானவர் என்றும், அவருக்கு ஓட்டு போடுங்கள்' என்றும் இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழ்' என்ற ஒரு சொல்லை பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்யாமல், நல்லவன் எவன் வந்தாலும் நமக்கு நல்லது. விஷால் உண்மைக்கும் நல்லவன். அரசியல் மாற்றம் வேணும்னு நினைக்கிறவன் விஷாலுக்கு ஓட்டு போடுங்க..மக்களுக்காக உண்மையா உழைப்பாரு, இது என் கருத்து' என்று கூறியுள்ளார்.