திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 10 நவம்பர் 2018 (09:12 IST)

உலகமே போற்றத் தொடங்கி விட்டது : கமல்ஹாசன்

இந்திய சினிமாவின் முக்கியமான அடையாளம் கமல்ஹாசன் ஆவார். அவர் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.  அவருக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் மக்களும் பலமான ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்தவர், இப்போது சர்கார் படத்thai  மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.
 
ஆனால் தன் படத்துக்கு பிரச்சனை  எழுந்தபோது வேறு எவரும் குரலெழுப்பாத போது (விஜய் கூட தன் படத்துக்கு இதுநாள் வரை எதுவும் வாய் திறக்கவில்லை) சர்கார் விவகாரத்துக்கு மூத்த  நடிகர் என்ற முறையில் முதல் ஆளாக குரல் கொடுத்தார்.
 
இந்நிலையில் நடிகரும் ம.நீ.மை தலைவருமான கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:
 
’சினிமாவில் உள்ள பிபலத்தை  வைத்து வரவில்லை; நல்ல அடித்தளத்தை வைத்தே அரசியலுக்கு வந்துள்ளேன். மக்கள் நீதி மையத்தின் செயல்பாடுகளை உலகமே போற்றத்தொடங்கி விட்டது. ’இவ்வாறு அவர்  தெரிவித்திருக்கிறார்