பெண்கள் உலக கோப்பை டி20 போட்டி: இந்திய அணி அபார வெற்றி
பெண்களுக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டித்தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் நிலையில் முதல் லீக் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 194 ரன்களை குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான தானியா பாட்யா, ஸ்மிருதி மாந்தனா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 103 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். மேலும் 20 ஓவர் போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.
இந்த நிலையில் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து வீராங்கனை சுஸி பேட்ஸ் 62 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது லீக்கில் பாகிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது.