ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 10 நவம்பர் 2018 (07:58 IST)

மக்கள் விரோத அரசை வீழ்த்தவே கூட்டணி : ஸ்டாலின்

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு  இப்போதே கட்சிகள் கூட்டணியில் இணையத் துவங்கிவிட்டனர்.
 
சில நாட்களுக்கு முன் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நீண்ட நாட்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தார்.
மேலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளூமன்ற  தேர்தலுக்கு மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.
 
அதற்கு முக்கியமான காரணம் தற்போதைய ஆளும் மத்திய அரசுடன் அவருக்கு உண்டான கசப்புணர்வே ஆகும்.
 
அதனால் எப்படியும் மோடி அரசை வீழ்த்தியே தீர வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு இந்தியாவில் உள்ள கட்சித்தலைவர்களை சந்தித்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று சென்னைக்கு வந்த அவர் திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
 
அப்போது இருவரும் இணைந்து செய்தியாளரகளுக்கு பேட்டி கொடுத்தனர்.
அப்பொது ஸ்டாலின் கூறியதாவது:
 
மக்கள் விரோத அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காக சந்திரபாபு நாயுடு இந்த கூட்டணியை அமைகும் முயற்சியை மேற்கொள்கிறார்.
 
மோடியின் ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதனை தடுத்து நிறுத்த அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைவர்களை சந்தித்து கூட்டணிக்காக ஒன்றிணைந்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.