’பில்லா பாண்டி’ நல்ல படம் : அமைச்சர் கடம்பூர் ராஜூ

pilla pandi
Last Modified சனி, 10 நவம்பர் 2018 (08:28 IST)
தீபாவளிக்கு வெளிவந்த சர்கார் ஆளும் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. படத்தின் வியாபாரத்துக்காக ஆடியோ ரிலீஸின் போது மேடை ஏறி யாரோ எழுதிக்கொடுத்த வரிகளை ஒப்பிப்பதுபோல அரசியல் நெடி கலந்த வார்த்தைகளையே பேசினார் விஜய்.
அவரது  அரசியல் ஆசைகள் உள்ளுக்குள் இருந்து முதலமைச்சராவது ஒருபுறம் இருக்கட்டும் முதலில் அவரது சினிமாதுறையில் அதுவும் தன் படத்துக்கு  எழுந்த விமர்சனத்துக்குக் கூட பதிலளிக்காதவர் இனி மாநிலத்தில் எழும் பிரச்சனைக்காக  அவர் என்ன பேசப்போகிறார்.
 
இவரது வசனங்கள் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினாலும் இனியாவது இந்த சந்தர்பவாதம் பேசுகிற நடிகர்களின் உண்மைத் தன்மையும் அவர்களின் மார்க்கெட் உத்திகளையும் கண்டு தெளிய வேண்டும்.
 
இந்நிலையில் ஒருவழியாக சர்கார் பிரச்சனை ஓய்ந்து விட்டது. சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன.
 
சர்கார் படத்துடன் ரிலீசான பில்லாபாண்டி படத்தை பார்த்து விட்டு அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து கூறியிருக்கிறார்.
 
அவர் கூறியதாவது:
 
எதார்த்தமான நடிப்பால் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :