விஸ்வாசம் முடிந்தது: அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது?

Last Modified சனி, 10 நவம்பர் 2018 (07:52 IST)
இயக்குனர் சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'தல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி தனது சமூக வலைத்தளத்தில், 'அனைவரின் ஆசிகளுடன் வாழ்த்துக்களுடன் இனிதே வெற்றிகரமாக விஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவடைந்தது' என்று டுவீட் செய்துள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது' என்று டுவீட் செய்துள்ளார்.

மேலும் இந்த படத்திற்கான டப்பிங் பணியையும் அஜித் ஏற்கனவே முடிந்துவிட்டதால் அஜித்தை பொருத்தவரையில் இந்த படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றன. இதனையடுத்து தனது இயல்பான தோற்றத்திற்கு மாறியுள்ள அஜித், இயக்குனர் எச்.வினோத் இயக்கும் அடுத்த படத்திற்கான தோற்றத்திற்கு இன்னும் சில நாட்களில் மாறவுள்ளார். அஜித்-வினோத் இணையும் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

வரும் பொங்கல் அன்று 'விஸ்வாசம்' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை விரைந்து முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் ஐந்து பாடல்கள் கம்போஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் எடிட்டிங் பணி முடிந்தவுடன் அவர் பின்னணி இசைப்பணியை தொடங்கிவிடுவார் என்றும் கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :