திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 மார்ச் 2023 (19:09 IST)

காட்டில் வைத்து கள்ளக்காதலனை உயிருடன் எரித்த பெண்!

fire burn
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் தன்னிடம் வாங்கிய நகையைத் திருப்பிக் கொடுத்த கள்ளக்காதலனை, பெண் ஒருவர் உயிருடன் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகிலுள்ள கண்ணுமேய்க்கிபட்டி என்ற பகுதியில் வசித்து வந்தவர் முத்துக்குமார்(35). இவருக்கு மனைவியும், இரு குழந்தைகள் உள்ளனர்.

அதே ஊரில் வசித்து வருபவர் மகேஷ்வரி(36).  இவரது கணவர் இறந்த நிலையில், தன் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் முத்துக்குமாருக்கும், மகேஷ்வரிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால், மகேஷ்வரியிடமிருந்து, முத்துக்குமாரி பணம், நகைகளைப் பெற்று வந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தான் கொடுத்த நகை மற்றும் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி, மகேஷ்வரி முத்துக்குமாரிடம் கேட்டுள்ளார். ஆனால், இதைக் கொடுக்க அவர் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மகேஷ்வரி, கடந்த 28 ஆம் தேதி தவசிப்பட்டி அருகிலுள்ள ஒரு காட்டுப்பகுதியில், மகேஷ்வரியுடன் முத்துக்குமார் தனிமையில் இருந்துள்ளார்.

அப்போது, மகேஷ்வரி, கேனில் மறைத்துவைத்திருந்த பெட்ரோலை முத்துக்குமார் மீது ஊற்றித் தீ வைத்துள்ளார்.

இதில், தீக்காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, மகேஷ்வரியைக் கைது செய்தனர்.