1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2023 (21:31 IST)

கியூபாவில் 7 நாட்களாகப் பற்றி எரியும் காட்டுத் தீ

cuba
கியூபா நாட்டில் கடந்த 7 நாட்களாகக் காட்டுத் தீப் பற்றி எரிகிறது.

கியூபா நாட்டில் பிரதமர்  மேனுயல் மேரியோ க்ரூஸ் தலைமையிலான கம்யூனிஸ்ட் பார்டி ஆப் கியூபா ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, ஹியல்குயில் உள்ள கிழக்கு பினாரஸ் டி மயாரி மலைப்பகுதியில், தீப் பிடித்து, ஒரு வாரமாக பற்றி எரிந்து வருவதால் காட்டுத்தீயை அணைக்காமல் மக்கள் திணறி வருகின்றனர்.

தற்போது இந்தக் காட்டுத்தீயை அணைக்க அந்த நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புத்துறை ஆலோசனை செய்து இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.

தீயணைப்புத்துறையை அடுத்து, விமானங்கல், ஹெலிகாப்டர்கள் மூலம் கொளுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை வீரர்கள்  அணைத்து வருகின்றனர்

இந்தக் காட்டுத்தீயில் சிக்கி, இதுவரை 2,223 ஏக்கர் பரப்பில் இருந்த மரங்கள், தாவரங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.