1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 11 பிப்ரவரி 2023 (23:06 IST)

2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்த ஐக்கிய நாடுகள் சபை !

karur
பாரதப்பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் பெருமுயற்சியால் உலகநாடுகள்  2023 ஆம் ஆண்டை சர்வதேசசிறுதானிய ஆண்டாக  (INTERNATIONAL MILLET YEAR 2023) ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது, இந்திய விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாகும்.
 
சிறுதானிய விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வும், விவசாயிகளை அதிக வருமானம் பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், சிறுதானிய விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக, நம் மாநிலத்தில் முதல்முறையாக நமது கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலும் அதிக மகசூலும் தரும் 
 
புதியரக விதைச்சோளம், விதைக்கம்பு, 
 
சிறுதானிய பயிறு விதைகள், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கிட  தமிழக பாஜக மாநில தலைவர், திரு. K.Annamalai IPS அவர்கள் திரு. GK Nagaraj அவர்களின் அறிவுறுத்தல்படி கரூர் மாவட்ட தலைவர் திரு. V V Senthilnathan முன்னிலையில்  
 
விவசாயிகளுக்கு இலவசமாக சிறுதானிய விதைகள் மற்றும் உயிர் உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணராயபுரம் மேற்கு மண்டல், பாலராஜபுரம் கிராமம் வீரராக்கியம் நடராஜபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியை கிருஷ்ணராயபுரம் மேற்கு மண்டல் விவசாய அணி தலைவர் திரு.ராஜேஷ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சிறுதானிய பயிர் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர். சிவக்குமார் அவர்கள் கலந்துகொண்டு சிறுதானிய பயன்பாட்டின் நன்மைகள் பற்றியும்,விதை விதைத்தல், பயிர்செய்யும் முறை, பயிர்பாதுகாப்பு செய்யும் முறை ,அதிகளவு மகசூல் எடுத்தல், அதிக விலைக்கு சந்தைப்படுத்தி விற்பது பற்றிய ஆலோசனை விபரங்கள் நேரடியாக விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்து கூறினார்.
 
பின்னர் மாவட்ட விவசாய அணி சார்பில் வீரியரக சோள விதைகள் மற்றும் இயற்கை முறை விவசாய உயிர் உரங்கள் வழங்கப்பட்டு அவற்றை சாகுபடி செய்யும் முறைகளும் தெரிவிக்கப்பட்டது.
 
இத்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் திரு .அருணாச்சலம் ,மாநில விவசாய அணி துணைத்தலைவர் திருமதி. சத்தியபானு , மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளர் திரு .Vasanth R Bharathi வசந்தராகபாரதி , திரு.தியாகராஜன் , மாவட்ட செயலாளர்கள் திருமதி.செல்வி, திரு .ஐயப்பன் உள்ளிட்ட விவசாய அணி நிர்வாகிகள் மற்றும் பாஜக வழக்கறிஞர் Delhi Prabhu டெல்லி பிரபு ஆகியோர்  இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.