வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (08:44 IST)

ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நாவில் வாக்கெடுப்பு: புறக்கணித்த இந்தியா!

உக்ரைன் மீது போர் தொடர்ந்தது தொடர்பாக ரஷ்யா மீது ஐ.நா சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்த நிலையில் பல மாதங்கள் ஆகியும் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் சில பகுதிகளை கைப்பற்றிய ரஷ்யா அதை அதிகாரப்பூர்வமாக தங்கள் நாட்டுடன் இணைத்துள்ளது.


ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பல கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்நிலையில் உக்ரைன் பகுதிகளை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐ.நா சபையில் நடந்தது.

இந்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. தீர்மானத்திற்கு எதிராக ரஷ்ய ஆதரவு நாடுகள் 5 வாக்களித்தன. ஆனால் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளன. இந்தியா நடுநிலைமையை நாடுவதால் இந்த முடிவை எடுத்துள்ளது.

Edited By: Prasanth.K