வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 11 பிப்ரவரி 2023 (18:33 IST)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : முன்னாள் முதல்வர் பழனிசாமி மீது புதிய வழக்கு

கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்டது தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு    உச்ச நீதிமன்றத்தில்வரும் திங்கட்கிழமை  விசாரணைக்கு வரவுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை வெளீட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணி நீக்க  செய்ய வேண்டுமென  உயர் நீதிமன்றத்தில் பாலச்சந்தர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு மாற்றி அதிமுக அரசு உத்தரவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்டதாகவும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது,