வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (21:01 IST)

போலீஸார் அலைக்கழிப்பு: பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மகனுடன் தீக்குளிப்பு

லக்னோவில் தன்னை கூட்டு பலத்காரம் செய்த நபர்கள் மீது புகார் கொடுக்க சென்ற போது போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்யாமல் அலைக்கழித்ததால் மனமுடைந்த பெண் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பலாத்காரம் செய்த நபர்கள் மீது காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். இதனால், அந்த பெண் தனது மகனுடன் தீக்குளித்தார். அவரின் மகன் 15 சதவீத தீக்காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இறக்கும் முன்பு அந்த பெண் அளித்த, காவல்துறை அவரின் புகார் மீது எப்ஐஆர் பதிவு செய்ய மறுத்ததாக மரண வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அவரது, கணவர் எப்ஐஆர் பதிவு செய்யப் பணம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், இதில் தொடர்புடைய 3 காவல்துறையினர்  இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.