பேஸ்புக் நெருக்கத்தால் விபரீதம் : காவலரின் மனைவிக்கு நேர்ந்த கொடுமை
பேஸ்புக் மூலம் காவலரிடம் நெருக்கமாக பழகிய பெண்ணின் செய்கையால், காவலரின் மனைவி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு சென்ற சம்பவம் நடந்துள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையட்தில் குற்றபிரிவில் பணிபுரிபவர் சார்லஸ். இவருக்கு முகநூல் மூலம் ஜோதி என்கிற பெண் அறிமுகமாகியுள்ளர். அந்த பழக்கம் வெளியே இருவரும் தனிமையில் சந்திக்கும் நிலை வரை சென்றுள்ளது.
அதன்பின், அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்களை வைத்து சார்லஸை மிரட்டி ரூ.13 லட்சம் பணம் வரை பறித்துள்ளார் ஜோதி. அந்தப் புகைப்படங்களை ஜோதி வெளியிட்டால் தன் குடும்பத்தில் பிரச்சனை வரும், மேலும் தன் வேலைக்கும் சிக்கல் ஏற்படும் என பயந்த சார்லஸ் அமைதியாக இருந்து விட்டார்.
ஆனால், காவலர் குடியிருப்பில் குடியிருக்கும் சார்லஸின் வீட்டிற்கு சென்ற ஜோதி, சார்லஸின் மனைவியிடம் அனைத்து புகைப்படங்களையும் காட்டி மிரட்டியுள்ளார். மேலும், பத்திரிக்கைகளில் இவற்றை வெளியிட்டு உன் கணவரின் வேலையை பறித்துவிடுவேன் என அவர் மிரட்டியுள்ளார். சமீபத்தில் ஒரு வார பத்திரிக்கையில் அந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டார். இதைக்கண்ட சார்லஸின் மனைவி சுமதி, விரக்தியில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தற்போது சுமதி உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, ஜோதி மற்றும் அவரது சகோதரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.