வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2024 (10:49 IST)

வீட்டில் கொள்ளையடித்த திருடன்.. தனது ஆசிரியர் வீடு என தெரிந்ததும் அதிர்ச்சி!

ஆவடியில் வீடு ஒன்றில் திருடிய திருடன் அது தனது ஆசிரியர் வீடு என தெரிந்ததும் வருத்ததில் ஆழ்ந்துள்ளார்.



ஆவடியில் அருகே திருநின்றவூர் சுதேசி நகரை சேர்ந்தவர் 20 வயதான சத்யா. திருட்டு தொழிலில் ஈடுபட்டு வரும் சத்யா மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. சமீபத்தில் திருநின்றவூர் தாசர்புரம் 3வது தெருவில் ஆள்நடமாட்டம் இல்லாமல் வீடு ஒன்று இருப்பதை நோட்டமிட்ட சத்யா இரவில் வீடு புகுந்து 40 பவுன் நகை, ரூ30 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளரும் அரசு உதவிப்பெறும் ஆசிரியர் கிருபை ஜானும், அவரது மனைவியும் ஆசிரியருமான தீபம் அவர்களும் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் சத்யாவை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

அப்போதுதான் சத்யாவிற்கு தான் திருடியது தனது முன்னாள் ஆசிரியர் வீட்டில் என தெரிய வந்துள்ளது. கிருபை ஜானின் மனைவி தீபத்திடம் சத்யா 7ம் வகுப்பு வரை மாணவனாக படித்தவர். தனது ஆசிரியர் வீடு என தெரியாமல் திருடி விட்டதாக வருந்திய சத்யாவிடம் இருந்து 24.5 பவுன் நகை, 25 கிராம் வெள்ளி, மற்றும் ரூ.60 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K