திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (09:48 IST)

இது நல்ல தொழிலா இருக்கே.. பேங்க் வேலையை விட்டு திருட்டு வேலை செய்த இளம்பெண்!

திருட்டு தொழிலில் நல்ல சம்பாத்தியம் கிடைப்பதால் வங்கி வேலையை விட்டு முழு நேர திருட்டில் ஈடுபட்டுள்ளார் இளம்பெண் ஒருவர்.



உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஜெஸ்ஸி அகர்வால் என்ற இளம்பெண் பெங்களூரில் தங்கி தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இதற்காக அவர் பெண்கள் விடுதி ஒன்றில் தங்கி வந்துள்ளார். சமீபத்தில் வங்கி வேலையை விட்ட அவர் தொடர்ந்து பெங்களூரில் தங்கியிருந்த நிலையில், அங்கு தங்கியுள்ள சக பெண்களின் லேப்டாப், மொபைல் போன், நகை உள்ளிட்டவற்றை திருடியுள்ளார்.

அவற்றை தனது சொந்த ஊருக்கு சென்று விற்றுள்ளார். இதில் நல்ல வருமானம் கிடைத்ததால் இதை முழு நேர வேலையாக தொடங்கிய அவர் ஒவ்வொரு முறையும் வேறு வேறு பெண்கள் விடுதியில் தங்குவதும், பின்னர் திருடி விட்டு வேறு விடுதிக்கு சென்று விடுவதுமாக இருந்துள்ளார்

சமீபத்தில் அவ்வாறு ஒரு விடுதியில் திருட்டில் அவர் ஈடுபட்ட நிலையில் சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் இதையே முழு நேர வேலையாக அவர் செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

Edit by Prasanth.K