திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2024 (15:12 IST)

இந்திய நிலப்பரப்பை சீனாவுக்கு தாரைவார்த்து கொண்டிருக்கும் மோடி- அமைச்சர் மனோ தங்கராஜ்

MANO THANGARAJ
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் மற்ற கட்சிகள் மீது விமர்சனம் மற்றும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், இந்திய சீன எல்லைப் பகுதியில் 96 லட்சம் ஏக்கர்  நிலப்பரப்பை சீனா மோடி ஆட்சியில்  சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்று தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளாவது:
 
’’இந்திய சீன எல்லைப் பகுதியில் 96 லட்சம் ஏக்கர்  நிலப்பரப்பை சீனா மோடி ஆட்சியில்  சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இதைத் தடுக்க தவறியதோடு  அதைப்பற்றி பேசக்கூட துணிவும் திராணியும் இல்லாத மோடி அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவு பற்றி பேசுகிறாரா?
 
முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் துரும்பை எடுங்கள்...
 
அருணாச்சல பிரதேசம் - கல்வான் பள்ளத்தாக்கு, 14 -வது முனையத்தில் சீனா 2.5 லட்சம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. இங்கு சீன ராணுவ வீரர்கள் டென்ட் அமைத்து முகாமிட்டுள்ளனர். இதே பகுதியில் நடைபெற்ற சண்டையில், இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் ஆயுதங்களின்றி சண்டையிட்டு உயிரிழந்துள்ளனர். இதேபோல லடாக், அக்சாய் சின் பகுதியில் 94 லட்சம் ஏக்கர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது.இது குறித்து உங்கள் கட்சி தலைவர் சுப்ரமணியசுவாமி அவர்களே பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 
 
பணமதிப்பிழப்பு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, ரஃபேல் ஊழல், தேர்தல் பத்திர ஊழல் போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளிலிருந்து மக்களை திசை திருப்பவே தேர்தல் நேரத்தில்   கச்சத்தீவு குறித்து  பேச துவங்கியிருக்கிறது பாஜக. 
 
இந்திய நிலப்பரப்பை சீனாவுக்கு தாரைவார்த்து கொண்டிருக்கும் மோடி கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க  என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை பொதுமக்களுக்கு விளக்க முடியுமா?’’ என்று தெரிவித்துள்ளார்.