திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : செவ்வாய், 22 மார்ச் 2022 (00:59 IST)

சிட்டுக்குருவியை காப்பாற்றிய நபர் !

கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் காவிரி ஆற்று பகுதிக்கு  சென்றுள்ளனர் .அப்போது காவிரி ஆற்று தண்ணீரில் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு  ஒரு சிட்டுக்குருவி மிதந்து வந்து கொண்டிருந்தது.

அதை பார்த்த ஒருவர் காவேரி ஆற்றுக்குள் இறங்கி அந்த சிட்டுக்குருவியை கையில் பிடித்து  காப்பாற்றி   கொண்டுசென்று அதற்கு சிகிச்சை அளித்து பின்னர்  பறக்க விட்டனர். உயிர் பிழைத்தோம் என்ற நிம்மதியில் சிட்டுக்குருவி பறந்து சென்றது.