செவ்வாய், 18 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (09:10 IST)

ஒரே நாடு ஒரே தேர்தல்.. உச்சநீதிபதியின் கருத்து கேட்க கூட்டுக்குழு முடிவு..!

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய கூட்டு குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த கூட்டு குழு தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கருத்து கேட்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய மத்திய அரசு குழு அமைத்த நிலையில், அந்த குழு அழைத்த பரிந்துரையின் அடிப்படையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்புகள் எதிர்க்கட்சிகள் தெரிவித்த நிலையில், இந்த மசோதாக்களை ஆய்வு செய்ய காங்கிரஸ், பாஜக உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களை கொண்ட கூட்டு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக மக்களவைத் தலைவர் பாஜக எம்.பி. பி. சவுத்ரி உள்ளார்.

இந்த நிலையில், இந்த நாடாளுமன்ற கூட்டுக் குழு பல்வேறு துறை நிபுணர்களிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்துக்களை கேட்டு வருகிறது. அடுத்த கட்டமாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இதுகுறித்து கருத்து கேட்க இருப்பதாகவும், பிப்ரவரி 25ஆம் தேதி தலைமை நீதிபதியை கூட்டுக் குழு சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அவர் கூறும் கருத்தை பொறுத்து, இந்த மசோதாவின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva