திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மே மாத டிக்கெட் விற்பனை எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு தரிசனங்களுக்கு டிக்கெட் ஆன்லைன் மூலம் விற்கப்பட்டு வரும் நிலையில், இந்த டிக்கெட்டுகளை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் பக்தர்களும் வாங்கி வருகின்றனர்.
அந்த வகையில், மே மாதத்திற்கான சிறப்பு தரிசனம், ஆர்ஜித சேவை இன்று முதல் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சுப்ரபாதம், தோமாலா, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகளுக்கு இன்று காலை 10 மணி முதல் ஆன்லைன் டிக்கெட் கிடைக்கும் என்றும், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆயுத சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த டிக்கெட்டுகளை, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், போலியான இணையதளங்களில் பதிவு செய்து ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva