அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி முறை குலுக்கலின்படி,பிரித்தெடுக்கும் பணி
கரூர் மாவட்டம், தாந்தோனிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி முறை குலுக்கலின்படி,பிரித்தெடுக்கும் பணி நடை பெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் (கூடுதல்) கவிதா தலைமையில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேர்தல் பிரிவு, லீலா குமார் முன்னிலையில் கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, எட்டு பேரூராட்சி, மூன்று நகராட்சி, ஒரு மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் பிரித்து அந்தந்த, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்கினார்கள்.