1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (16:36 IST)

மோடி மீண்டும் பிரதமராக காமராஜர் மக்கள் கட்சி பாடுபடும்- தமிழருவி மணியன்,

modi - annamalai
பல்லடம் அருகே நடைபெறும் பாஜக பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசிய தமிழருவி மணியன், மோடி மீண்டும் பிரதமராக காமராஜர் மக்கள் கட்சி பாடுபடும் என்று அறிவித்துள்ளார்.

கடந்த 2023 ஜூலை மாதம், ராமேஸ்வரத்தில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் தொடங்கப்பட்டது 'என் மண் என் மக்கள்' என்ற பாதயாத்திரை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும்  பாஜகவினர் பயணம் செய்த நிலையில்,  234 ஆவது சட்டமன்றத் தொகுதியாக, இன்றைய தினம், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு வந்தடைந்துள்ளது.
 
சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் அவர்கள் நினைவிடத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கிய அண்ணாமலை தலைமையிலான  பாஜகவினர்   என் மண் என் மக்கள் நடைபயணத்தினை நிறைவு செய்துள்ளனர்.
 
இந்த நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் பிரமாண்டமாக நடக்கிறது. இதில் கலந்துகொள்ள இன்று பிரதமர் மோடி பல்லடம் வருகை புரிந்துள்ளார்.
 
இந்தப் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசிய தமிழருவி மணியன், மோடி மீண்டும் பிரதமராக காமராஜர் மக்கள் கட்சி பாடுபடும் என்று அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ் நாட்டில் எங்கே பாஜக இருகிறது என்ற நிலைம  மாறி, எங்கும் இருக்கிறது  என்ற நிலையுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதற்காக   ஒழுக்கமும் உண்மையுமான் சார்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட காமராஜர் மக்கள் கட்சி பாடுபடும் என்று தெரிவித்துள்ளார்.