வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (21:02 IST)

நன்கு தூங்கி விட்டு வரும் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இங்கு வந்து போராடுவது எப்படி ? அமைச்சர் கேள்வி

தேர்தல் அறிவித்தவுடன் தி.மு.க வின் முதல்வேலை ! நீதிமன்றத்திற்கு செல்வது தான் ! 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் கொடுப்பது மத்திய அரசு, என்றும் ஆனால் அங்கு அதை பாராளுமன்றத்தில் கேட்காமல் நன்கு தூங்கி விட்டு வரும் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இங்கு வந்து போராடுவது எப்படி என்று ! ? கரூர் அருகே தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க வேட்பாளர்களையும், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து அனல்பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். அப்போது, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காக்காவாடி பகுதியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, தேர்தல் அறிவித்தவுடனே தி.மு.க வின் முதல்வேலையே நீதிமன்றத்திற்கு செல்வது தான், ஆனால், 4 வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்த வில்லை என்று ஒரு பெயரை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது கூட நீதிமன்றத்திற்கு சென்று பொங்கல் தொகையினை கொடுக்க தடை விதித்துள்ளது. அதற்கும் தி.மு.க தான் காரணம், ஆகையால் மக்கள் வாக்களித்த பிறகு ஒரு வாரத்திற்குள் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ 1000 வழங்க உள்ளார்கள்.

ஆகவே, அனைவருக்கும் பல ஏழை, எளிய திட்டங்கள் கிடைத்திடும் வகையில் அனைத்து தரப்பினரும் பலனளிக்கும் வகையில் ஏராளமான திட்டங்களை தீட்டி வந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி வரும் ஒரே முதல்வர் நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்றார்.

மேலும், கரூர் மாவட்டத்தில் நூறுநாள் வேலைதிட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு மத்திய அரசு தான் சம்பளம் கொடுக்க வேண்டுமென்றும், ஆனால், தற்போது தமிழக அரசு ஒரு குழுவினை மத்திய அரசிடம் அனுப்பி ஒரிரு நாள்களில் அந்த பணம் வந்துவிடும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 100 நாள் வேலை திட்டத்தினையும், அதன் செயல்களையும் கவனிப்பது மத்திய அரசு, ஆனால் இங்குள்ள காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியோ அங்கே வாய்திறக்காமல், நன்கு தூங்கி விட்டு, அப்படியே அமைதியாக வந்து கரூரில் போராட்டம் நடத்துவதையும் சுட்டிக்காட்டினார்.