திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 21 டிசம்பர் 2019 (22:08 IST)

பரோட்டா மாஸ்டராக மாறிய அமைச்சர் - வித்தியாசமாக வாக்கு சேகரிப்பு !

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புரோட்டா மாஸ்டராக மாறிய சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டமாக நடக்க நடக்க இருக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக விராலிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆர் கே  சிவசாமிக்காக சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

விராலிமலை கடைத்தெருவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த புரோட்டா கடைக்கு சென்று மாஸ்டரிடம் கரண்டி மற்றும் எண்ணையை வாங்கி புரோட்டா சுட்டார்.  இதை பார்த்த அனைவரும் கலகலப்பாக அவரிடம் பேச அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்