தலைக்கவசம் உயிர்கவசம், கார்களில் கட்டாயம் சீட்பெல்ட் என்பதனை வலியுறுத்தி மாணவ, மாணவிகளின் ஸ்கேட்டிங்க் பேரணி
கரூரில் முதன்முறையாக போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க கோரியும், தலைக்கவசம் உயிர்கவசம், கார்களில் கட்டாயம் சீட்பெல்ட் என்பதனை வலியுறுத்தி மாணவ, மாணவிகளின் ஸ்கேட்டிங்க் பேரணியினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
கரூரில் முதன்முறையாக போக்குவரத்து விழிப்புணர்விற்காக ஸ்கேட்டிங்க் பேரணியினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். கரூர் அடுத்த திருக்காம்புலியூர் பகுதியின் ரவுண்டானா அருகே துவங்கிய இந்த ஸ்கேட்டிங்க் விழிப்புணர்வு பேரணி கரூர் நகர போக்குவரத்து காவல் துறை சார்பிலும், அக்னி ஸ்கேட்டிங்க் அகாடமி மற்றும் கரூரில் உள்ள ஈகிள் தொலைக்காட்சியும் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தியது.
முன்னதாக அனைவரிடத்திலும் கரூர் நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் காவல் ஆய்வாளர் மாரிமுத்து அனைவரிடமும் விழிப்புணர்வு பிரசூரங்களை கொடுத்ததோடு, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களும் மக்களிடையே பிரசூரங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதிக பாரம் ஆபத்தில் முடியும், சாலைவிதிகளை மதிப்போம் மரணத்தினை தவிர்ப்போம், மிதவேகம் மிகநன்று, போதையில் பயணம் பாதையில் மரணம், தலைக்கவசம் உயிர்கவசம், காரில் பயணம் சீட் பெல்ட் முக்கியம் என்கின்ற வாக்கியங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஸ்கேட்டிங் பேரணி தயாரானது. இந்த பேரணியினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
இந்த ஸ்கேட்டிங் பேரணி கரூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கோவை சாலை வந்து கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே வந்தடைந்தது. இது போன்ற இந்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி கரூரில் முதன்முறையாக என்பது குறிப்பிடத்தக்கது.