1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: வியாழன், 14 பிப்ரவரி 2019 (19:38 IST)

விருத்தாசலம் அருகே டிராக்டர் மோதி தலைமை ஆசிரியை உடல் நசுங்கி சாவு

கடலூர் : திட்டக்குடி அருகே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதிய விபத்தில் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை  உடல் நசுங்கி உயிரிழந்தார்.


 
கடலூர் மாவட்டம்  திட்டக்குடி அருகே ராமநத்தத்தை சேர்ந்தவர்  செல்வமணி(55).  இவர் வள்ளிமதுரம்  அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று பள்ளியிலிருந்து மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது கீழ்கல்பூண்டி கண்டமத்தான் அருகே  கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி செல்வமணி பலியானார். விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநர் அங்கேயே டிராக்டரை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.