செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 30 ஜனவரி 2019 (12:14 IST)

படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த விஷ்ணு விஷால்!

தமிழில் வெண்ணிலா கபடிகுழு மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம்  ஆனவர் விஷ்ணுவிஷால். 



இவர் அந்த படத்தை தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை,  முண்டாசுப்பட்டி,  இன்று நேற்று நாளை, வேலைண்ணு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் , சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ராட்சசன்’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது தவிர  ஜகஜால கில்லாடி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் விஷ்ணு விஷால் நடித்து வரும் புதிய படத்தின்  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சண்டை காட்சியை படமாக்கப்பட்டு வருகிறது, அதில் விஷ்ணு விஷால் நடித்தபோது கழுத்தில் பலத்த அடிபட்டு காயம் அடைந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
 
விஷ்ணு விஷால் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். கழுத்து காயத்துக்கு சிகிச்சை எடுத்த படத்தை விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு கூறியிருப்பதாவது:-
 
“எனக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. வலியும் அதிகமாக இருக்கிறது. கைகளிலும் வலி இருக்கிறது. இதற்காக சிகிச்சை எடுத்துள்ளேன். 4 வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். விரைவில் குணமாகி விடும் என்று நம்புகிறேன். அதன்பிறகு படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். உங்கள் ஆசிர்வாதமும், ஆதரவும் தேவை”
 
இவ்வாறு விஷ்ணுவிஷால் கூறியுள்ளார்.