வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 13 பிப்ரவரி 2019 (10:43 IST)

தேவை அறுவை சிகிச்சை, பேண்டெய்டு இல்லை – கெஜ்ரிவால் மீது கம்பீர் பாய்ச்சல் !

டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை 17 பேர் வரை இறந்திருக்கும் நிலையில் டெல்லி அரசின் மீது கிரிக்கெட் வீரர் கம்பீர் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

உலகில் உள்ள நெருக்கமான நகரங்களில் டெல்லியும் முக்கியமான நகரம். அதிகரித்து வரும் நகர்மயதாலின் விளைவால் இந்நகரம் கட்டிடங்களால் நிரம்பி வழிகிறது. அதனால் டெல்லி அரசாங்கம் கட்டிடம் கட்டுவதில் உள்ள முறையான விதிகளைப் பின்பற்றாமல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று டெல்லியின் கரோபாக் பகுதியில் உள்ள ஒரு தனியார்  நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்தக் கட்டிடத்திலும் விதிமீறல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு டெல்லி அரசு சார்பில் தலா 5 லட்சம் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக டெல்லி அரசு மீது முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரரும் டெல்லிவாசியுமான கவுதம் கம்பீர் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

இது சம்மந்தமாக ‘அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களே... மனித உயிர்கள் கண்டிப்பாக 5 லட்சம் ரூபாயை விட அதிக மதிப்பு கொண்டது. அரசு இயந்திரம் மக்களைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதை இந்த இழப்பீடு அறிவிப்பு சுட்டிக் காட்டுகிறது. டெல்லியில் ஆழமாக வேரூன்றிப் போயுள்ள ஆக்கிரமிப்பு, விதிமீறல்கள் போன்ற புண்ணுக்கு 5 லட்சம் இழப்பீடு என்பது பேண்டெய்டு ஒட்டுவது போலத்தான். இவற்றைக் களைய நிர்வாக ரீதியான அறுவை சிகிச்சை டெல்லிக்குத் தேவைப்படுகிறது’ எனக் கூறியுள்ளார்.

தீவிபத்து நடந்த கட்டிடத்தின் அருகில்தான் கவுதம் கம்பீர் பவுண்டேஷன் என்ற நிறூவனமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.