வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (13:06 IST)

தந்தையை இழந்த சிறுமிகளுக்கு டார்ச்சர்; வசமாக சிக்கிய சசிகலா..

கடலூரில் சிறுமிகளை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் அவர்களை கொடுமைப்படுத்திய பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்து, அந்த சிறுமிகளை மீட்டுள்ளனர். 
 
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த பெருமாள் - சித்ரா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள். எதிர்பாராத விதமாக பெருமாள் இறந்துவிட வருமானத்திற்காக சித்ரா கூலி வேலை செய்துள்ளார். எனவே, தனது குழந்தைகளை உறவினர் சசிகலா வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார். 
 
ஆனால், சசிகலா குழந்தைகளை பார்த்துக்கொள்ளாமல் ஆவர்களை கொடுமைப்படுத்தியுள்ளார். சிறுமிகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு வேலைக்கு செல்ல வற்புறுத்துவது அப்படி செய்யாவிட்டால் சூடு வைத்து கொடுமை படுத்துவது ஆகியவற்றை தனது ஆண் நண்பருடன் சேர்ந்து செய்துள்ளார். 
 
இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வர அவர்கள் போலீஸாருக்கு புகார் அளித்துள்ளனர். விசாரணைக்கு பின்னர், சிறுமிகளை மீட்டு சசிகலாவை கைது செய்துள்ளனர். அவரது ஆண் நண்பர் ஜோதிராமலிங்கத்தை தேடிவருகின்றனர். 
 
சிறுமிகளுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது சமூக நல பாதுகாப்பு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.