ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (12:36 IST)

டிசம்பர் வந்துருச்சுல... சென்னைக்கு இருக்கு ரெய்ன் ட்ரீட்: பீதியை கிளப்பும் வெதர்மேன்!

சென்னைக்கு மட்டும் யாரும் எதிர்பாராத வகையில் மழை பெய்ய கூடும் என தமிழக வெதர்மேன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து படிப்படியாக மழை குறையும் என்றும் டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன்  தனது சமூக வலைத்தள பக்கத்தில் மழை குறித்த அப்டேட்டை பதிவிட்டுள்ளார். அதில், மிகவும் வித்தியாசமான வடகிழக்கு பருவமழை தொடர்ந்து வருகிறது. எப்போதும் போல இரவில் இருந்து காலை வரை கடலோர பகுதிகளில் மழை பெய்யும். 
 
கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் எப்படி தனியாக கனமழை பெய்ததோ அதேபோல் கனமழை மீண்டும் பெய்ய வாய்ப்புள்ளது. வரும் டிசம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் இருந்து மழை பெய்யும் என  குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால் சென்னை வானிலை ஆய்வு மையமோ தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.