வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2019 (11:07 IST)

பாடாய் படுத்தும் முரசொலி நிலம்: பாமக, பாஜக டோட்டலி அப்செட்?

முரசொலி விவகாரம் குறித்து தவறான குற்றச்சாட்டை முன்வைத்ததாக திமுக சார்பில் பாமக் நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக நிர்வாகி சீனிவாசன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 
 
தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின், பஞ்சமி நிலம் குறித்து அசுரன் திரைப்படம் பேசியுள்ளது. இந்த திரைப்பட குழுவினருக்கு எனது பாராட்டுக்கள் என டிவிட்டரில் பதிவிட்டார். இதை தொடர்ந்து அவரது கருத்துக்கு எதிர் கருத்தாக பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி கட்டிடமே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதுதான் என கூறினார். 
 
அதற்கு பதிலளிக்கும் விதமாக முக ஸ்டாலின், முரசொலி பத்திரத்தின் பட்டாவை பதிவிட்டு, முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலம் அல்ல என கூறினார். இதையடுத்து, ராமதாஸ் முரசொலி கட்டிடத்தின் மூலப்பத்திரத்தை காட்டுமாறு ஸ்டாலினை குறிப்பிட்டு கூறினார். 
இதனிடையே உள்ளேபுகுந்த தமிழக பாஜக செயலாளர் ஆர் ஸ்ரீனிவாசன் டெல்லியில் உள்ள தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்தில் முரசொலி நிலம் குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை  மேற்கொள்ளப்பட்டது. 
 
 இந்த விசாரணைக்கு திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி ஒத்துழைப்பு கொடுத்தார். ஆனால், புகார் அளித்த சீனிவாசன் விசாரணைக்கு வரவில்லை. இதன் பின்னர் முரசொலி நிலம் தொடர்பாக அவதூறு பரப்பியதற்கு பாமக நிறுவனர் ராமதாசும், பாஜக தேசியச் செயலாளர் சீனிவாசனும் திமுகவிடம் மன்னிப்பு கோர வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி அறிவித்திருந்தார்.
 
ஆனால், இதை எதையும் இவர்கள் கண்டுக்கொள்ளாத நிலையில் தற்போது ஆர்.எஸ்.பாரதி, சென்னை ழூம்பூர் நீதிமன்றத்தில் ராமதாஸ் மற்றும் சீனிவாசம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த வழக்கு வரும் 5 ஆம் தேதி விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.