1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The famous Biriyani store owner arrested

ரூ.5.70 கோடி பணமோசடி புகார்: பிரபல பிரியாணி கடை உரிமையாளர் கைது

chennai
சென்னையில் பல கிளைகள் கொண்ட பிரபலமான பிரியாணி கடை ஒன்றின் உரிமையாளர் ஆசிப் அகமது என்பவர் பணமோசடி புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்


 


சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கோதண்டம் என்பவர் கொடுத்த புகாரில், 'தன்னிடம் ஆசிப் அகமது பிரியாணி கடை வைக்க ரூ.5.70 கோடி கடன் வாங்கியதாகவும், கடனுக்கு உத்தரவாதமாக அவர் கொடுத்த காசோலைகள் போதிய பணமின்றி திரும்பி விட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணையை நடத்தாமல் இருக்க தனக்கு ரூ.2 கோடிக்கு டிடியும், ரூ.2 கோடிக்கு செக்கும் கொடுத்ததாகவும், ஆனால் டிடி போலியானது என்றும், செக் பணமின்றி திரும்பி வந்துவிட்டதாகவும், கோதண்டம் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் மனுவை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆசிப் அகமதுவை கைது செய்தனர்,
அடுத்த கட்டுரையில்
மாட்டு வண்டியில் விஜயகாந்த் பயணம் ஏன்? பரபரப்பு தகவல்