வேண்டுமென்றே மோதி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர்... பகீர் சம்பவம்

chennai
Last Modified வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (19:23 IST)
சென்னை அம்பத்தூர் அருகே சாலையில்சென்ற ஒரு கார், அருகில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுவர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் என்ற பகுதியில் வசித்து வந்தவர்  டில்லி பாபு. இவர் மிளகாய் வியாபாரம் செய்து வந்துள்ளார்.  இவரும் இவரது நண்பரும், இருசக்கர வாகனத்தில் மாதவரம் நோக்கிச் சென்றனர்.
 
அந்த நேரத்தில் வேகமாக ஒரு வாகனம் பின்னால் வந்து, இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு இரக்கமே இல்லாமல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
 
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த டில்லி பாபு மற்றும்,  ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துகு விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :