என்ன பாத்து டிரைவர்னு சொல்லிட்டா... தீபாவால் குமுறும் ராஜா!

Last Modified வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (18:57 IST)
ஜெ தீபா புகார் அளித்த ராஜா என்பவர் தனக்கும் தீபாவுக்கு இடையேயான நட்பு குறித்து பேசியுள்ளார். 
 
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், டிரைவர் ராஜா என்பராலும், அவரைச் சார்ந்த நபர்களாலும் எனக்கும், எனது கணவர் மாதவன் ஆகிய எங்களின் இருவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என பேசியிருந்தார். 
 
இந்நிலையில் இது குறித்து ராஜா பேசியிருக்கிறார். ராஜா கூறியதாவது, ரொம்ப கஷ்டமா இருக்குதுங்க. தீபாவை சின்னப் பொண்ணு பருவத்துல இருந்து எனக்கு தெரியும். நாங்க ஃப்ரெண்ட்ஸ். 
 
ஆனா என்னைய இப்போ டிரைவர்ன்னு சொல்றப்ப மனசு காயப்படுது, இதயம் வலிக்குது. என்னை ரொம்பக் காயப்படுத்துராங்க இப்படி சொல்லி. அவர் சொல்லும் எந்தப் புகார்களுக்கும் ஆதாரமில்லை. எல்லாமே பொய் குற்றச்சாட்டு என தன் தரப்பு நியாத்தை வெளிப்படுத்தியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :