1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (08:00 IST)

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைந்துள்ள மைக்ரோ பயாலஜி துறை கட்டடத்தில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக இந்த தீ கட்டிடம் முழுவதும் பரவியதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த முக்கிய ஆவணங்கள் சேதம் அடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர். உடனடியாக 35 வாகனங்களில் விரைந்து வந்து  சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் அருகில் உள்ள மற்றொரு கட்டடத்தில் தான் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து நடந்த வார்டிலும் அதற்கு அருகில் உள்ள வார்டுகளிலும் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக வேறு வார்டுகளுக்கு மாற்றியதால் இந்த தீ விபத்தால் எந்தவித உயிர்ச்சேதமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தீவிபத்து மின்சாரக்கசிவு காரணமாக ஏற்பட்டிருப்பதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். சரியான நேரத்தில் தீ விபத்து கண்டுபிடிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டதாகவும், தீயணைப்பு துறையினர் சிறப்பாக செயல்பட்டதாகவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் இந்த விபத்து குறித்து குறிப்பிட்டுள்ளார்