ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 1 ஜூன் 2023 (16:10 IST)

விஜய் டிவி பிரபலம் KPY தீனாவுக்கு திருமணம்...மணப்பெண் யார் தெரியுமா?

dhenna -pragathi
விஜய் டிவியில் கலக்கப் போவது யார் என்ற நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்ற தீனா – பிரகதிக்கு  இன்று காலை பட்டுக்கோட்டையில்  திருமணம்  நடைபெற்றது.

விஜய் டிவியில் பிரபல கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பவர் தீனா. இவர், கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தன் சொந்த ஊரான திருவாரூரில் கடந்த சில நாட்களுக்கு முப்பு வீடு கட்டி பிரகப்பிரவேசம் செய்திருந்தார்.

இதையடுத்து, தீனா-   கிராபிக் டிசைனர் பிரகதிக்கு  இன்று  திருவாரூரில் திருமணம் நடைபெறுள்ளது.

இத்திருமண நிகழ்ச்சிக்கு திரையுலகினரை சேர்ந்த பிரபலங்களை அழைக்க முடியாத நிலையில், சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.