ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2023 (18:15 IST)

சாலையில் இருசக்கர வாகனம் விபத்து...பிளஸ் 2 மாணவி உட்பட 2 பேர் பலி

accident
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மாமரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு திரும்பிய விஷாலி, மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகேயுள்ள தாளாக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன்  மகள் விஷாலி(17 வயது) இவர் அங்குள்ள பசுபதி கோவில் புனித கரிபியல் பெண்கல் மேல் நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால், தேர்வு எழுதிவிட்டு, இன்று மாலை வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார்.

அவருடன் அவரது உறவினர் பிரதீப்(26) தன் இருசக்கர வாகனத்தில் விஷாலியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, நல்லிச்சேரி சாலையில், நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மாமரத்தில் மோதி இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில், விஷாலி மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.