1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2023 (19:41 IST)

மூன்றரை வயது குழந்தையை கடித்த தெருநாய்கள்

dogs
சமீப காலங்களில்   தமிழகத்தின்  பல பகுதிகளில் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் நாய்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இந்நிலையில் சென்னை ராயபுரம் பகுதியில் நாய் ஒன்று நேற்று ஒருநாளில் மட்டும் 20க்கும் மேற்பட்டோரை கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
 
அங்குள்ள அதிராம்பட்டினத்தில் வீட்டில் இருந்த மூன்றரை வயது குழந்தையை 3 தெரு நாய்கள் கடித்து குதறியதில் பரபரப்பு ஏற்பட்டது. 
 
குழந்தை காயங்களுடன் பட்டுக்கோட்டை  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
அப்பகுதியில் தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் புகாரளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.