புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (10:59 IST)

காதலியை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்த இளைஞர்... வளைத்து பிடித்த போலீஸ்

சென்னை ஓட்டேறி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(24) பிஎஸ்சி பட்டதாரியான இவர் அயனாவரத்தில் வசிக்கும் இளம் பெண் ஒருவரை விரட்டி விரட்டி கடந்த 2 ஆண்டுகளாக காதலித்துள்ளார்.இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளனர். அதன் விளைவாக காதலி கர்ப்பமானார். வீட்டுக்கு தெரிந்தால் விபரீதமாகிவிடும் என்று நினைத்து இளம் பெண் வயிற்றில் வளரும் கருவை கலைத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இவ்விஷயம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரிந்துள்ளது. எனவே இரு வீட்டாரும் கலந்து பேசி மார்ச் மாதம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
 
ஆனால் திடீரென்று  விஜயகுமார் அப்பெண்ணை  திருணம் செய்ய மறுத்துள்ளார். இதனைதொடர்ந்து இளம்பெண் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விஜயகுமாரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.