புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 13 பிப்ரவரி 2019 (18:43 IST)

மின் கம்பத்தை பிடித்து விளையாடிய சிறுவன் ...ஷாக் அடித்து பலி...

ஹைதராபாத்தில் உள்ள பண்டகுண்டா என்ற பகுதியில் சிறுவர் பூங்கா உள்ளது. அங்கு நேற்று முந்தினம் மாலை 6 மணிக்கு சிசிடிவு கேமராவில் பதிவான காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளன.
அதில் ஒரு சிறுவன் மஞ்சல் டீசர்ட் அணிந்து அங்கிருக்கும் கரண்ட் கம்பத்தை தொடுகிறான். அதன்பிறகு எந்த உணர்ச்சியுமே இல்லாமல் அவன் அப்படியே நிற்கிறான். இதை யாருமே கவனிக்கவில்லை என்று தெரிகிறது.
 
ஆனால் இச்சிறுவன் கம்பத்தை தொட்டு விளையாடிக் கொண்டுள்ளதாக மற்ற சிறுவர்கள் கருதினார்கள். ஒருகட்டத்தில் அச்சிறுவன் ஆடாமல் அசையாமல் உள்ளதை பார்த்த சிலர் அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.இதனையடுத்து போலீஸார் இச்சம்பவம் குறித்து  விசாரணையை தொடங்கினர். 
 
அதில் உயிரிழ்ந்த சிறுவன் சென்னையைச் சேர்ந்தவன் என்றும். அவன் ஹைதராபாத்தில் 1ஆம் வகுப்பு படித்து வந்ததாகவும் தகவல் தெரியவந்தது.மேலும் பூங்கா பகுதியில் அலட்சியமாக சரியாக பராமரிக்காமல் இருந்ததுதான் இந்த உயிரிழப்பு நடக்கக் காரணம் என்ற ரீதியில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.