புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: சனி, 16 பிப்ரவரி 2019 (19:37 IST)

நடிகை யாஷிகா தற்கொலை! தேடப்பட்ட காதலன் போலீசில் சிக்கினார்!

நடிகர் விமல் நடிப்பில் வசூலில் சக்கை போடு போட்ட மன்னார் வகையறா படத்தில் துணை நடிகையாக நடித்தவர் யாஷிகா (வயது 21). இவர் திருப்பூரை சேர்ந்தவர் ஆவார்.  இவரின் சொந்தப் பெயர். வடபழனியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து, சினிமாவில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்துவந்தார்.  சில சீரியல்களில் துணை நடிகை வேடத்தில் நடித்துள்ளார்.  


 
யாஷிகா  சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து யாஷிகா அவரது அம்மாவிற்கு வாட்சப் மூலம் அனுப்பிய குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்.
 
அந்த செய்தியில், யாஷிகா பெரம்பூரை சேர்ந்த மோகன் பாபு என்பவரை காதலித்ததும், அவருடன் ஒரே வீட்டில் தங்கி வசித்ததும் தெரியவந்தது.  அதன்பின் அவர் யாஷிகாவை தனியாக விட்டு சென்றதும் அதனால் தான் இவர் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தகவல் வெளியே வந்தது.
 
இதனால் மோகன் பாபுவை போலீஸார் தேடி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டார். மேலும், யாஷிகா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டதால், அவரைப் பிரிந்து சென்றதாகவும், அவர் தற்கொலை கொள்வார் என தான் நினைக்கவில்லை என்றும் மோகன் பாபு கூறினார்.