பொங்கி வழிந்த காதல்: 10ஆம் வகுப்பு மாணவன் செய்த வேலை

10
Last Modified சனி, 16 பிப்ரவரி 2019 (11:54 IST)
விழுப்புரத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சக மாணவிக்கு வகுப்பறையில் தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
விழுப்புரம் மாம்பழப்பட்டு கிராமத்தில் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 600க்கும் மேற்பட்ட மாணவ மானவிகள் படித்து வருகின்றனர்.
 
இப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் தன்னுடன் படிக்கும் ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார். தனது காதலை அந்த மாணவன் மாணவிக்கு தெரிவித்தபோது அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
 
இந்நிலையில் மதிய உணவு வேளையில் மாணவி உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது மாணவியிடம் சென்ற அந்த மாணவன், திடீரென தன் கையில் வைத்திருந்த தாலியை எடுத்து மாணவியின் கழுத்தில் கட்டினான்.
 
இதனால் அதிர்ந்துபோன மாணவி அழுதுகொண்டே வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறினார். கடும் கோபமடைந்த அவர்கள், பள்ளிக்கு விரைந்து அந்த மாணவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதற்கிடையே மாணவியின் பெற்றோர், அவர் கழுத்திலிருந்த தாலியை தூக்கி எறிந்தனர். பள்ளிநிர்வாகம் அந்த மாணவனை பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :