என் சிங்கக்குட்டி ரொம்ப அதிர்ஷ்டசாலி.! கையில் குழந்தையுடன் குதூகலிக்கும் சென்ராயன்!

Last Updated: திங்கள், 11 பிப்ரவரி 2019 (20:19 IST)
தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் அறிமுகமானவர் நடிகர் சென்ராயன். தொடர்ந்து ‘சிலம்பாட்டம்’ , ’ஆடுகளம்’, ‘மூடர் கூடம் என பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். பிறகு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றார்.


 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது தனக்கு குழந்தை இல்லை அதனால் அனாதை குழந்தைகளை தத்தெடுக்க போவதாக கூறியிருந்தார் சென்றாயன். அதன் பின்னர் கமலும் கண்டிப்பாக உங்களுக்கு  குழந்தை பிறக்கும் என்று கூறியிருந்தார். கமல் சொன்ன வாக்கு பலித்தது போலவே சென்றாயன் மனைவி கருவுற்றார்.  
 
பிறகு கர்ப்பமாக இருந்த மனைவி கயல்விழி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ராயன் இருந்த போதுதான் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சொன்னார். 
 
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியயே வந்த சென்ராயன், மனைவி  சினேகாவின் தீவிர  ரசிகை என்பதால் தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக கர்ப்பமாக இருந்த கயல் விழியை சினேகாவின் வீட்டுக்கே அழைத்துச் சென்று சந்திக்க வைத்து ஆச்சர்யப்படுத்தினார்.
 
இந்நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்த சந்தோசஷத்தை பகிர்ந்த  சென்ராயன் கூறியதாவது, டாக்டர் உங்களுக்குப் பையன் பிறந்திருக்கான்னு சொன்னதும் எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துடுச்சு. என் பையனைக் முதன் முதலில் கையில் தூக்கும்போது இந்த உலகமே எனக்குக் கிடைச்ச மாதிரி அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு.


 
நான் பிறந்தப்போ எங்க ஊர்ல ஒரு சிலருக்கு மட்டும்தான்  தெரியும். ஆனால், இப்பொழுது என் பையன் பிறந்ததை எல்லோரும் கொண்டாடுறாங்க.  தாயும், சேயும் நலமா இருக்காங்க. என் சிங்கக்குட்டி ரொம்பவே அதிர்ஷ்டசாலி. எல்லோருடைய பிரார்த்தனைக்கும் நன்றிகள்’ என்று கூறியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :