வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Updated : சனி, 11 நவம்பர் 2017 (16:18 IST)

மம்தாவிற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்த நடிகர் கமல்ஹாசன்

சினிமா குடும்பத்தைப் பெருமைபடுத்துவதற்காக மேற்கு வங்க முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்து ட்வீட்  செய்துள்ளார்.

 
மேற்கு வங்க அரசின் சார்பில் கொல்கத்தாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவுக்கு  அந்த அரசின் சார்பில் நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதற்காக சென்னையிலிருந்து அவர் நேற்று  கொல்கத்தாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். விழா தொடங்குவதற்கு முன்பு நடிகர் கமல், மம்தா பானர்ஜியை சந்தித்தார். சுமார் 10  நிமிடம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. பின்னர் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் இருவரும் கலந்து கொண்டனர்.

 
இதற்கு நன்றி தெரிவித்து கமல் ட்வீட் செய்துள்ளார். அதில் மீண்டும் மீண்டும் என்னை அழைத்து சினிமா குடும்பத்தைப் பெருமைப்படுத்துவதற்காக நன்றி. இக்குடும்பத்தில் ஒருவனாக உள்ளதற்கு பெருமைப்படுகிறேன். வேற்றுமையும் ஒற்றுமையும் என்பதற்கு சிறந்த உதாரணம் இது என்றும். உங்களுடைய லண்டன் பயணத்துக்கு என் வாழ்த்துகள் என்று கூறுயுள்ளார்.