திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2017 (14:37 IST)

கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மகள் ஸ்ருதிஹாசன்

இன்று நடிகர் கமல்ஹாசனின் 63வது பிறந்த நாள். உலகநாயகனின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி  வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு கமலின் மகள் ஸ்ருதிஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் கமலுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

 
 
இந்நிலையில் கமலின் மகள் ஷ்ருதி ஹசன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தனது 61வது பிறந்தநாளை  கொண்டாடும் கமலுக்கு அவருடைய மகள் ஸ்ருதிஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். அதில், அருமையான தந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து. உங்களுடைய ஆர்வமும், மின்னும் அறிவும் எப்போதும் போல பரகாசிக்க  வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் அனைத்திலும் சிறப்படைய வாழ்த்துக்கள். என் பாபுஜீக்கு அன்பும் அரவணைப்பும் என்று  குறிப்பிட்டுள்ளார்.

 
கமல் பிறந்தநாளுக்கு நடிகை சோபனா, விஷால் ரசிகர்கள், நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.